--- --:--:-- --

வயிற்று வலியால் துடித்த கல்லூரி மாணவி.. விடுதியில் பிறந்த குழந்தை..!

12

ரசு கல்லூரி மாணவி ஒருவர் ஆதிதிராவிடர் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அதிகாலையில் வயிற்று வலியால் துடித்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது விடுதியில் பரபரப்புக்கு உள்ளாகியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த விடுதி காப்பாளர்கள் மாணவியை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மனோஜ் என்பவருடன் மாணவி லிவிங் உறவில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. உடனே ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர்களுக்கும் மாணவியின் குடும்பத்தினருக்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.

 

இருதரப்பு மருத்துவமனை விரைந்த நிலையில் இதுவரை எந்த ஒரு புகார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவி விடுதியில் சேரும்பொழுது 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் கேட்ட பொழுது இப்படித்தான் எனக் கூறிய மாணவி மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon