--- --:--:-- --

அப்பள இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட பெண்ணின் தலை..!

5

ப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி படுகாயம் அடைந்த பெண் தொழிலாளிக்கு அப்பள கம்பெனி 32 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையம் உத்தரவிட்டது.

 

வழக்கை சேர்ந்த கார்த்திகா என்று அந்த பெண் தொடுத்த வழக்கில் முதலில் தனது முந்தானை சிக்கியவுடன் அப்பள இயந்திரத்தை நிறுத்தும்படி தான் கேட்டதாக கூறியுள்ளார்.

 

ஆனால் நிறுத்துவதற்கு பதில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு வேகத்தை இயக்கியதால் இயந்திரத்தில் தமது தலைமுடி சீக்கி மூக்கு முதல் தலையின் மேற்புறம் வரை தோல் உரிந்து மண்டை ஓடு தெரியும் அளவிற்கு படுகாயம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அதன் பிறகும் கூட அப்பள கம்பெனி முதலாளி மருத்துவமனைக்கு அனுப்பாமல் தனது கணவரை வரவழைத்து அனுப்பி வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon