மத்திய ஆசிய நாடுகளில் மிகப்பெரிய கோவிலாக அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளிலேயே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனை தொடர்ந்து உலக அரசு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனையடுத்து அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். சுவாமி நாராயணன் கோவில் 79.86 மீட்டர் நீளம் 32.92 மீட்டர் உயரம் கொண்டது. 27 ஏக்கர் பரப்பளவில் 700 கோடியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்புக்காக சென்ற பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பளித்தனார்.
சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டார். பின்னர் தரை தளத்தில் உள்ள கோயிலை திறந்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.