ஆக்சிலேட்டரில் மாட்டிக்கொண்ட செருப்பு.. மோதிய லாரி..!
திருவாரூர் அருகே ஆக்சிலேட்டரில் செருப்பு மாட்டி லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து லாரி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. நன்னிலம் அருகே ஸ்ரீ காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் லாரி சர்வீஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றனர்.
மணிவண்ணன் ஸ்ரீ வாஞ்சியம் நோக்கி லாரியை ஓட்டி சென்று நிலையில் குடகு வாசல் செல்லும் சாலையில் வளைவில் திரும்பும் பொழுது லாரியின் ஆக்ஸிலிடரில் செருப்பு மாட்டியது.
வேதத்தை குறைக்க முடியாமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோது விபத்திற்கு உள்ளானது. இதில் லாரியில் பயணித்த இருவரும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





