--- --:--:-- --

அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு திடீர் உத்தரவு..!

8

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சாலை சந்திப்பு கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளை நடத்துனர் எச்சரிக்கை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்தும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துனர் குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்குவதை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon