இனிமேல் செலவு வைக்க மாட்டேன்.. தந்தையின் சிரமத்தை குறைக்க உயிரை விட்ட மகள்..!
அரசு பள்ளி மாணவி ஒருவர் தன் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா.
17 வயது சிறுமியானவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய தந்தை சுட்டிக்காட்டி தன்னால் மருத்துவமனைக்கு செலவு செய்ய முடியவில்லை என சிறுமியை திட்டியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி இனிமே நான் உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன் எனவும் தனக்கு செலவு செய்யப்படத்தில் வீட்டை கட்டி முடிக்குமாறு கூறி உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





