போதையில் விளையாட்டாக செய்த வினை.. உயிரை பறித்த விபரீதம்..!
மதுபோதையில் விளையாட்டாக விஷம் அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். போதை பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபோதையில் விளையாட்டாக விஷமருந்தியதாக தெரிய வந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





