--- --:--:-- --

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு பாய்..!

6

ந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து தனி அறையில் காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

தந்தையின் அறுவை சிகிச்சைக்காக சிறிது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் தங்கி இருக்கிறார். மருத்துவமனையின் தனி அறையில் தங்கிய சிறுமிக்கு அதே மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெங்கடேசனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon