--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு..!

1

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 6244 பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

 

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான இந்த தேர்வு மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கும். இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

வழக்கமாக இந்த தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் இந்தாண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு பணி மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தாண்டு நடக்க உள்ள தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் அவற்றை மார்ச் 4 முதல் மார்ச் 6 ஆம் தேதிக்குள் அதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேர்வுக்கு 15லட்சத்துக்கும் அதிமானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon