--- --:--:-- --

11 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

4

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தனியார் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் தாக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

திருப்பூரின் துணை கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பெருநகர சென்னை கொளத்தூர் துணை ஆணையராக இருந்த சக்திவேல் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டிருக்கிறார். மேலும் பல்வேறு பிரிவு காவல் அதிகாரிகள் ஐந்து பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon