--- --:--:-- --

டிநகரில் மாயமான சிறுமி.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த அவலம்..!

3

சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பள்ளி மாணவி தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்த கவிதா தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரித்து வருகிறார்.

 

இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் டியூஷனுக்கு சென்ற மாணவி கவிதா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இது குறித்து பெற்றோர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மாணவி துர்காவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் செங்கல்பட்டு பரனுர் விமான நிலையத்திற்கு அருகே துர்காவை போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் மாணவியன் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon