இன்று இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகுது கனமழை..!
தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதே போன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 6 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில், வரும் 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




