சிலிண்டர் கிடங்கு தீ விபத்து.. வெடித்து சிதறும் பரபரப்பு காட்சி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதனால் அங்கிருந்து சிலிண்டர் பெரும் சப்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கீழே அணைத்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சேதமாகின.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





