வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மிளா குட்டி..!
திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மிளாக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. பூமங்கலம் பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட மூன்று மாத மிளாக்குட்டி வீடுகளுக்குள் தஞ்சமடைந்தது.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்து வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் மிளாக்குட்டியை மீட்டனர். தொடர்ந்து மலைப்பகுதியில் விடுவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





