காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்துரு என்ற கல்லூரி மாணவர் ஸ்டேஷன் சாவடி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பெயரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் ஒருவருடன் சந்துருவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த பெண்ணின் காதலை மிரட்டியதால் விரக்தி அடைந்த சந்துரு நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது எனினும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





