ரயிலை சூழ்ந்த நீர்.. நெருங்கும் விஷப்பூச்சிகள்.. அச்சத்தில் மக்கள்..!
ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தெவிக்கும் பயணிகளில் ஒருவரான அண்ணாமலை என்பவர் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். ரயிலையே சூழ்ந்து விஷ பூச்சிகள் நெருங்கி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராம மக்கள் உதவியுடன் கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு பால் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





