வேகமாக சுற்றிக் கொண்டிருந்த ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி..!
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கோயம்புத்தூரிலிருந்து தனியார் வங்கி ஊழியர்கள் 57 பேர் இன்று காலை ஏற்காட்டை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு ஏற்காட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் சேதுராய கோயிலுக்கு சென்றனர். அப்பொழுதுதான் அங்கு அமைந்துள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள ராட்டினத்தில் செல்ல டிக்கெட் வாங்கி முதலில் 27 நபர்கள் சென்றனர்.
அதன் பிறகு இருபது நபர்கள் அந்த ராட்டினத்தில் அமர்ந்தனர். ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அதில் அமர்ந்திருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் மாரியப்பன் என்ற இருவரும் ராட்டினத்தில் அமர்ந்திருந்தனர்.
ராட்டினம் சுற்ற ஆரம்பிக்கும்போது தவறி விழுந்தனர். இதில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த மாரியப்பன் என்பவரை மேல் சிகிச்சைக்காக சேர அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





