--- --:--:-- --

சப் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி பெண்ணின் தலையில் பாய்ந்ததால் அதிர்ச்சி..!

6

உத்தரப்பிரதேசத்தில், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையத்துக்குச் சென்ற பெண், சப் இன்ஸ்பெக்டரின் அலட்சியத்தால் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளானார். உத்தரப்பிரதேசத்தில், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையத்துக்குச் சென்ற பெண், சப்-இன்ஸ்பெக்டரின் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் தலையில் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து வெளியான தகவலின்படி, அலிகார் நகரிலுள்ள காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மேலும், துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண்ணின் பெயர் இஷ்ரத் என்றும், புனித யாத்திரைக்காக சவூதி அரேபியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

சமூக வலைதளங்களில் வெளியான அந்த சிசிடிவி காட்சியில், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இஷ்ரத் தன் மகனுடன் காவல் நிலையத்துக்குள் நின்று கொண்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மாவிடம், சக போலீஸ் அதிகாரியொருவர், துப்பாக்கியைக் கொடுத்தார்.

 

அதை வாங்கிய மனோஜ் சர்மா, துப்பாக்கியை சுத்தம் செய்வதற்கு முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, அங்கிருந்த இஷ்ரத்தின் தலையில் பாய்ந்தது. அடுத்த கணமே நிலைதடுமாறி கீழே விழுந்தார் இஷ்ரத்.பின்னர் உடனடியாக, அருகிலிருந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷ்ரத், தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அவர் தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறோம். மேலும், தோட்டா இஷ்ரத்தின் பின்பக்க தலையில் பாய்ந்திருப்பதால், அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

 

இருப்பினும், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கான பொறுப்பு அதிகாரி பணம் கேட்டு துன்புறுத்தியதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதால் இஷ்ரத்தை அவர் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon