--- --:--:-- --

அமித்ஷா தலைமையில் இன்று 4 மாநில கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்..!

4

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பீகார் மாநிலம் பாட்னாவில் 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கிறார்.

 

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புறக்கணிக்கிறார் என தகவல் வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வதுகூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது.

 

கிழக்கு மண்டல கவுன்சில் என்பது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon