சென்னை வெள்ளம்.. இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜுக்கு பல கோடி நஷ்டம்!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வந்த வெள்ளம் எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை. சென்னை நகரவே பல அடி உயர தண்ணீரில் மூழ்கியது. மழை நின்று பல நாட்கள் ஆகும் நிலையில் தற்போதும் பல இடங்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை.

 

சினிமா நட்சத்திரங்கள் பலரது வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல நடிகர்கள் அதை பற்றி ட்விட் செய்தும் இருந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கும் வீடியோவும் நேற்று வைரல் ஆனது.

 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு சென்னை வளரசரவகத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. அவரது பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை அவரது அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்தாராம்.

 

மழை வெள்ளம் புகுந்ததால் அவரது வெளிநாட்டு சொகுசு கார்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கிவிட்டதாம் . மேலும் ஹாரிசின் ஸ்டூடியோ உள்ளேயும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம். இதனால் ஹாரிஸுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.