பிக் பாஸ் போட்டியாளர் செயலால் கோபமான ஹரிஷ் கல்யாண்..!

டிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது பார்க்கிங் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் ஹீரோயின் இந்துஜா இருவரும் பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு சென்றனர்.

 

பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கின் இறுதியில் ஹரிஷ் கல்யாண் தன்னிடம் இருந்த கோல்டு ஸ்டாரை விஷ்ணுவிடம் கொடுத்தார்.இதுபற்றி விஷ்ணு மற்றொரு போட்டியாளர் மணியிடம் பேசும்போது, ‘ஹரிஷ் என் ப்ரெண்டு. அதனால் தான் என்னிடம் ஸ்டார் கொடுத்தார்’ என கூறி இருக்கிறார்.

 

இந்த வீடியோ வைரல் ஆகி பலரும் விஷ்ணுவை கலாய்த்து வருகின்றனர். ‘இந்த விஷயம் ஹரிஷ் கல்யாணுக்கு தெரியுமா’ என கேட்டிருக்கின்றனர். அந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘ஷப்பா முடியலடா’ என குறிப்பிட்டு இருக்கிறார்.