திடீரென தடம் மாறி பள்ளத்துக்குள் சென்ற பேருந்து..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இரண்டு அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சக்தி மங்கலம் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது.
முந்தி சென்ற கார் மீது மோதாமல் இருக்க எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





