--- --:--:-- --

விவசாய கிணற்றில் இருந்த முதலை.. போராடி பிடித்த வனத்துறை..!

5

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாய கிணற்றில் இருந்த முதலையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி என்பவர் தோட்டத்தில் பாசன கிணறு ஒன்று உள்ளது.

 

இந்த கிணற்றில் முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்தவர்கள் மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினார்.

 

பின்னர் கிணற்றுக்குள் கூண்டு வைத்து முதலையை பிடித்து பவானிசாகர் அணையை நீர்த்தேக்க பகுதியில் விடுவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் முதலைகள் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon