கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்..!
தொழுகைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் காட்சிகள் வருகிறது. சிக்கந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்சியடைந்தார். அங்குள்ள தர்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த பொழுது ஒருவர் கள்ளச்சாவியை போட்டு திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இது குறித்து நாகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





