பிரதமர் மோடி இன்று திருப்பதி வருகை..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை 6.50 மணிக்கு திருப்பதி வருகிறார்.
திருப்பதி விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்க உள்ளனர்.பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர், நாளை காலை 8 மணியளவில் ஏழுமலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார். அதன்பின் காலை 10.20 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விமான நிலையம் முதல் திருமலை வரை பிரதமர் பயணம் செய்ய இருக்கும் பாதைகள், அவர் திருமலையில் தங்க இருக்கும் விருந்தினர் மாளிகை, ரயில்நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி நாளை விஐபி தரிசனங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், அதற்கு முந்தைய நாளான இன்று 26 ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




