--- --:--:-- --

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளிக்கு நடந்த அறுவை சிகிச்சை..!

9.1

ருத்துவமனையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி காயமடைந்த நிலையில் மருத்துவமனையின் மீது வழக்கு பதியாமல் போலீசார் மிரட்டுவதாக கட்டிட தொழிலாளியின் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

 

சேலம் ஐயம்பெருமாள் பட்டியை பகுதியைச் சேர்ந்த ரவி என்ற கட்டிட தொழிலாளி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனை ஒன்றில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது மண் சரிந்து விழுந்ததில் ரவியின் இடது கால் முறிந்தது. அதை மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் அறுவை சிகிச்சை செய்த மூன்று நாட்களில் வீட்டிற்கு செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

விபத்தை மறைக்க தனியார் மருத்துவமனையின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பிரவீன் மனைவி சரசு தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் முன்பாக அவரது தர்ணாவில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon