மார்பிங் செய்யப்பட்ட ராஷ்மிகாவின் போலி வீடியோ..!
தன்னை தவறாக சித்தரித்து வெளியான வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தொழில்நுட்பத்தை கண்டால் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்தரித்து வெளியான வீடியோ திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகையர் அமிதாபச்சன் தொடங்கி பலரும் இந்த விவகாரத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கு ஆதரவு தெரிவித்ததுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை மந்தனா இணையத்தில் வேகமாக பகிரப்படும் செய்யப்பட்ட வீடியோவை காணும்போது அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் போது தனக்கு அச்சம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார் தொல்லியல் அல்லது கல்லூரியில் படிக்கும் பொழுது தனக்கு இது நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ராஷ்மிகா இதுபோன்று அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன் இதனை தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





