--- --:--:-- --

காரை மறித்த பள்ளி ஆசிரியருக்கு உதயநிதி ரியாக்ஷன்

2

திருவாரூர் அருகே அம்மையப்பனில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

அப்போது மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் ஸ்டெதஸ்கோப் ஒன்றினை காதில் அணிவித்து மாணவிக்கு பரிசோதனை செய்தார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, வழிமறித்த தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் நீட், ஜேஇஇ, தேர்வுக்கு ஏற்றவாறும் மத்திய அரசு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டதாக கூறினார்.

 

ஆனால் அந்த நுழைவுத் தேர்வுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுக்காத காரணத்தால் தமிழக மாணவர்கள் நீட் தேர்விலும், ஜேஇஇ தேர்விலும் பலர் வெற்றி பெற முடியவில்லை என்று ஆசிரியர் வேதனை தெரிவித்தார். எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தை நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர் சரவணன் கோரிகை விடுத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon