கொட்டித்தீர்க்கும் கனமழை..தவிக்கும் தமிழக மக்கள்..!
சேதமான சாலைகள், மழைநீர் கழிவுநீர் கலப்பு, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் என சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை படாளம் அருகே உள்ள ஒரகடம் மற்றும் தட்டாங்குளத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
மழை காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளை ஆமை வேகத்தில் வாகனங்கள் கடந்து சென்னைக்குள் நுழைந்தன.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலை ஏற்கனவே சேதமான நிலையில், மழை காரணமாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி பயணம் செய்கின்றனர். முடிச்சூர் மேம்பாலம் அருகே சாலையில் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சாலை மோசமாக மாறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




