அமைச்சர் எ.வ.வேலு வீடு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை..!
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலையிலுள்ள பொறியியல் மருத்துவக் கல்லூரி உட்பட ஒரே வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட கல்லூரி அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை தொடர்கிறது. கோவையில் ஐந்து இடங்களிலும், கரூரில் நான்கு இடங்களிலும், விழுப்புரத்தில் மூன்று இடங்களிலும் வருமான வரி சோதனை தொடர்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





