--- --:--:-- --

திடீரென படகை தாக்கிய மின்னல்.. கடலில் விழுந்து காணாமல் போன மீனவர்..!

8

சீர்காழி அருகே மின்னல் தாக்கியதால் கடலில் தவறி விழுந்த மீனவரை கடலோர போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமலை வாசல் கிராமத்தை சேர்ந்தவர் கவிமணி.

 

இவரது பைபர் படகில் அவரது தம்பி செல்வமணி மகன் ஆகிய மூன்று பேரும் திருமுல்லை வாசலில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

 

அப்பொழுது மின்னல் தாக்கியதால் படகை இயக்கிய தஷ்வந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமானார். தகவலறிந்து சென்று திருமுல்லைவாயில் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon