தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவது நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





