--- --:--:-- --

காதல் விவகாரத்தால் இளைஞருக்கு நடந்த கொடூரம்..!

9

திருவாரூரில் ஆவின் நிறுவன ஊழியர் உயிரிழந்த வழக்கில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் ராகுல்.

 

29 வயதானவர் திருவாரூர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென மாங்குடி அருகே வாஞ்சியூர் என்ற இடத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் உடற்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை மாவட்டம் ஆத்தங்குடியை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவரை இளைஞர் காதலித்து வந்தது தெரிய வந்தது.

 

இந்த காதலுக்கு மாணவியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாணவியின் உறவினரான நாகா என்பவர் கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலமானது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த நந்தா உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon