ரூ.1 லட்சம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!
மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இதற்கு பின் செய்தியர்களை சந்தித்து அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே பேச்சுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மாநில அளவிலான போட்டிகள் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார். மாநில கல்வி கொள்கை விரைவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





