கூலித்தொழிலாளியின் 8 வயது குழந்தை மூளை பாதிப்பால் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை அருகே குழந்தைக்கு 9 மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போடப்படாததால் பக்க விளைவு ஏற்பட்டு எட்டு வயது குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிச்சாமியின் எட்டு வயது குழந்தை குழந்தைக்கு இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சோதனையில் குழந்தைக்கு மூளை பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்பது மாதத்தில் போட வேண்டிய தட்டம்மைக்கான தடுப்பூசியை செலுத்தாதது குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட காரணம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிகிச்சையில் இருந்த குழந்தை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருந்தது. குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது குறித்து அந்த பகுதி சுகாதார செவிலியர்களிடம் பெற்றோர் கேட்ட பொழுது 9 மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டதாக தகவல்கள் தந்துள்ளனர்.
ஆனால் தடுப்பூசி போடப்படவில்லை என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





