23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!

சென்னையில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கடந்த 2000 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய டேவிட் விபு என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு தப்பி ஓடினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் டேவிட் காவல்துறையினர் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.

 

அவர் கேரளாவில் இருப்பதை அறிந்து விசாரித்த பொழுது டேவிட் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அவர் பெயர் மற்றும் விவரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதால் கைரேகை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தபோது உண்மை வெளிவந்தது.

 

இதனை அடுத்து டேவிட்டை கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.