நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!

பெற்ற மகளை இழந்து துயரத்தில் வாடும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் பெயரின் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

எந்த பெற்றோருக்கும் நேராத தருணத்தை விஜய் ஆண்டனி கடந்து கொண்டிருக்கிறார். துள்ளி திரிந்து விளையாடி பேசி சிரித்த மகிழ்ந்த மூத்த மகளை அவர் இழந்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பில் நன்றாக படித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியின் விபரீத முடிவால் அந்த குடும்பம் கலங்கிப் போகிறது.

 

இந்நிலையில் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள கடிதத்தில் மகள் மிகவும் அன்பானவள், தைரியமானவள் என்று தொடங்கி இருக்கிறார். அவர் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத அமைதியான ஒரு இடத்திற்கு தான் சென்று இருப்பதாகவும் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மகளுடன் தானும் இறந்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விஜய் ஆண்டனி தமது மகளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.