பெரியார் சிலை மீது மாட்டுச் சாணம் வீசி அவமதிப்பு.. சுத்தம் செய்த காவல்துறையினர்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் மாற்று சாணத்தை பூசி சென்றனர். பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் தந்தை பெரியாரின் உருவச்சிலை உள்ளது.

 

அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் பெரியாரின் சிலை மீது மாட்டுச் சாணத்தை பூசி சென்றுள்ளனர். இதை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்தவர்கள் தண்ணீரை ஊற்றி பெரியாரின் சிலையையும் சுத்தம் செய்தனர்.

 

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

கோவை மாவட்ட வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.