இரு வேறு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவாரி எடுப்பது தொடர்பாக இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது.

 

அப்பொழுது ஒரு தரப்பு ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகையை மற்றொரு தரப்பினர் அப்புறப்படுத்தினார். அப்பொழுது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.