அரசு பள்ளியில் போட்ட திடீர் உத்தரவு.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!

ரசு பள்ளி வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்கில் டிபன் பாக்ஸ், கை, கால்களை கழுவினால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டகள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என மாணவர்கள் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்கில் டிபன் பாக்ஸ் முகம் கை கால்களை கழுவினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.