ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு..!

நாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு ஷவர்மா பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட பொதுமக்கள் சிலருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

இந்த நிலையில் அந்த தனியார் அசைவ உணவு கடையில், நாமக்கலை சேர்ந்த தவமணி – சரோஜா தம்பதியினரின் மகள் கலையரசி என்ற மாணவிக்கு வாந்தி பேதி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து கலையரசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைத்தனர்.