--- --:--:-- --

வயிற்று வலியால் அவதியுற்ற பெண்..பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர்..!

5

திருப்பத்தூரில் நள்ளிரவில் சிகிச்சைக்கு சென்ற பல் மருத்துவரிடம் தனியார் மருத்துவமனை டாக்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ பயிற்சி மேற்கொண்டு வரும் திருப்பத்தூரை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு நள்ளிரவில் வயிற்று வலி ஏற்படவே தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

பயிற்சி மருத்துவர் தியாகராஜன் என்பவர் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது உறவினர்களிடம் இளம் பெண் தெரிவித்துள்ளார். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து நியாயம் கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

 

மருத்துவமனையில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது இது குறித்து இளம் பெண் அளித்த புகாரில் மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon