இறுதி கட்டத்தை எட்டிய உரிமை தொகை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சத்தை குடும்ப தலைவிகள் விண்ணப்பித்தனர்.
இவர்களில் ஒரு கோடியே 6,50,000 பேர் இந்த திட்டத்தில் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பயனர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகளை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது.
பயனாளிகளின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





