--- --:--:-- --

மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் மோசடி..!

6

சென்னையில் திருமண இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி இளம்பெண்ணை திருமணம் செய்வதாக மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் படித்து வருகிறார்.

 

இவர் தனது திருமணத்திற்காக பாரத் மேட்ரிமோனி தொடங்கி பதிவு செய்து வரன் தேடி வந்தார். இந்தநிலையில் ராஜ் என்ற பெயரில் அறிமுகமாகி கேரள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்துள்ளார்.

 

இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என அவர் கூறியதை நம்பிய கேரளா பெண் மணிகண்டன் சாய்க்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை கேட்டுள்ளார்.

 

ஆனால் மணிகண்டன் சாய்ந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் தெலுங்கானா மாநிலம் செக்கந்திராபாத் பகுதியில் தனது நண்பரை கைது செய்தனர்.

 

இந்நிலையில் மணிகண்டன் சாய் மேலும் பல திருமண இணையதளங்களில் போலியான பெயரை தொடங்கி பல பெண்களிடம் மோசடி செய்து பணம் பறித்தது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon