--- --:--:-- --

ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுதிறனாளிகள் 2வது நாளாக போராட்டம்..!

6

இடைநிலை ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இரண்டாவது நாளாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னே 45க்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுடன் பெண்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

ஒரே பயிற்சி மையத்தில் படித்த 77 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களுக்கு ஏன் பணி வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு அரசு தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியின் படி தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon