--- --:--:-- --

கணவனின் நான்காவது கல்யாணத்தை தடுத்து நிறுத்த கோரி காலில் விழுந்த பெண் ..!

15

காஞ்சிபுரத்தில் கணவரின் நான்காவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து ஆட்சியர் காலை பிடித்து பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சேர்ந்த உஷா என்பவருக்கும், திருவண்ணாமலை வந்தவாசி பகுதியைச் சேர்ந்த காவலரான சீவராஜுக்கும் 2018 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்குள்ளே கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

 

தான் சிவராஜ் க்கு மூன்றாவது மனைவி என்றும் ஏற்கனவே சிவராஜ் திருமணமாகி இரண்டு மனைவியை பிரிந்து வாழ்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்ததை எடுத்து உஷா அதிர்ச்சி அடைந்தார். தற்பொழுது இது குறித்து போலீசாரிடம் உஷா புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

 

மேலும் சிவராஜ் நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்தும் படி அவரது மனைவி உஷா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்து ஆட்சியரின் காலை பிடித்து மன்றாடினார். புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon