--- --:--:-- --

கணவரின் மறைவுக்கு பின் உல்லாசம்.. திடீரென காதலனே அடித்து கொன்றதால் அதிர்ச்சி..!

9

ரூர் அருகே கணவரின் மறைவிற்குப் பிறகு தகாத உறவில் இருந்து வந்த பெண் தகாத உறவு காதலனால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். கரூர் அடுத்த அரசு காலணி பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு. இவரது கணவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் ராஜேந்திரன் என்பவருடன் ரூபிதா பானு தகாத உறவிலிருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் தனியாக இருந்த ரூபிதா பானுவை ராஜேந்திரன் சந்திக்க வந்த பொழுது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ரூபிதா பானுவை கீழே தள்ளிவிட்டு தாக்கிய ராஜேந்திரன் அவரை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூபிதா பானுவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon