சாக்லேட் ஜாம் டப்பாவில் மறைத்து தங்க கட்டி கடத்தல்.. விமான நிலையத்தில் சிக்கிய பயணி..!
திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் கடத்த முயன்று சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்பொழுது பயணி ஒருவர் கொண்டு வந்த இரண்டு சாக்லேட் ஜாம் டப்பாவில் தங்கத் துண்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன்படி 149 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





