தெரியாமல் ஆல்-அவுட்டை குடித்து பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை..!
சென்னை மணலியில் கொசு விரட்டும் திரவத்தை குடித்தது இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில் வீட்டின் ஹாலில் இரு குழந்தைகள் கொசு மருந்து புட்டியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு குழந்தை புட்டியில் இருந்த திரவத்தை குடித்து விட்டதாக தெரிகிறது. வாயில் நுரை தள்ள மயங்கி கிடந்த குழந்தையை பார்த்து பதறிய தாய் நந்தினி உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





