எஸ்ஐ கனவுடன் வந்த இளைஞர்..வளைவில் விபத்து..!
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் வளைவு ஒன்றில் அதிவேகமாக வந்து இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியது.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோவின் ஜோசப் என்பவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





